புது டெல்லி:

ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு மத்திய அரசு உடனே அவசர குடும்ப அட்டை வழங்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மக்களுக்கு மிகப்பெரிய அளவில் பரிசோதனை நடத்துவதுதான் கரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய ஆயுதம். ஆனால் நம் நாடு அந்தக் கட்டத்திலேயே இல்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளைக் கடுமையாக அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு இதுவரை 19 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.1.20 லட்சம் மக்கள் பலியாகியுள்ளனர். இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸால் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸைத் தடுக்க மத்திய அரசு மிகப்பெரிய, அசாத்தியமான நடவடிக்கை எடுத்தால்தான் கட்டுப்படுத்த முடியும். இல்லாவிட்டால் மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

கொரோனா வைரஸுக்குப் பின் மிகப்பெரிய பொருளாதாரச் சீரழிவையும் இந்தியா எதிர்கொள்ளப் போகிறது. அதையும் சமாளிக்கும் வகையில் திட்டமிடல் அவசியம். ஏழைகளின் கைகளில் பணப் புழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ராகுல் காந்தி சுட்டிக்காட்டியிருந்தார். .

இந்நிலையில், ரேசன் கார்டு இல்லாமல் ஊரடங்கால் சிக்கித் தவிக்கும் மக்கள் ரேஷன் பொருட்கள் பெற உதவிகரமாக இருக்கும். நூற்றுக்கணக்கான மக்கள் பட்டினியுடன் இருக்கும் போது கிடங்குகளில் உணவுப்பொருட்கள் தேங்கி கிடக்கின்றன எனவும் கூறியுள்ளார்.