க்னோ

குஜன் சமாஜ் கட்சியில் மாயாவதியின் நெருங்கிய உதவியாளராக இருந்த கட்சித் தலைவர் நசீமுதீன் சித்திக்கி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவிக்கு நெருங்கிய உதவியாளராக நசீமுதீன் சித்திக்கி இருந்தார்.   அவருடைய மகன் அஃப்சலும் அதே கட்சியில் இருந்து வந்தார்.    மாயாவதி தன்னிடம் இருந்து ரூ. 50 கோடி பணம் கேட்டதாகவும்,  மேலும் பல குற்றச்சாட்டுக்களையும் சித்திக்கி தெரிவித்தார்.   இதற்கு ஆதாரமாக அவர் மாயாவதியுடன் பேசிய தொலைபேசி உரையாடல் பதிவுகளையும் வெளியிட்டார்.

அதை ஒட்டி கடந்த வருடம் மே மாதம் 10ஆம் தேதி சித்திக்கி மற்றும் அவர் மகன் அஃப்சல் ஆகியோரை மாயாவதி கட்சியை விட்டு விலக்கினார்.    சித்திக்கி நேற்று தனது தொண்டர்கள் 100 பேருடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.  இந்த இணைப்பு காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மற்றும் உத்திரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர் முன்னிலையில் நடந்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து தாம் விலக்கப்பட்ட பிறகு ஆரம்பித்த ராஷ்டிரிய பஹமன் மோர்ச்சா என்னும் அரசியல் அமைப்பையும் சித்திக்கி காங்கிரஸ் உடன் இணைத்துள்ளார்.   இவருடன் மேலும் பல பகுஜன் சமாஜ் தலைவர்களும் இணைந்துள்ளனர்.   இவர்கள் அனைவரும் ராகுல் காந்திய சந்தித்தனர்.