இரண்டாவது ஒருநாள் போட்டி – வாய்ப்புக்காக காத்திருக்கும் ஷ்ரேயாஸ்

Must read

போர்ட் ஆஃப் ஸ்பெயின்: இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயரின் மீது பலரின் கவனமும் திரும்பியுள்ளது.

முதல் ஒருநாள் ஆட்டம் மழையின் காரணமாக ரத்துசெய்யப்பட்டுவிட, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது ஆட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. ஷ்ரேயாஸ் ஐயர் நடுக்கள வீரராக களமிறங்கவுள்ளார்.

இவர் டி-20 தொடரின்போது வாய்ப்பைப் பெறவில்லை. முதல் ஒருநாள் போட்டியும் 13 ஓவர்கள் மட்டுமே நடைபெற்றதால் அப்போதும் வாய்ப்பில்லை. எனவே, இந்த இரண்டாவது போட்டியில் தனது திறமையை நிரூபிக்கும் வாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருக்கிறார் ஷ்ரேயாஸ்.

வெறும் 2 ஒருநாள் போட்டிகளில் ஆடி, அணியில் தனது இடத்தை தக்கவைத்துக் கொள்வது கடினம் என்றாலும், இவருக்கு எதிர்காலத்தில் கிடைக்கும் வாய்ப்புகளின் மூலம் திறமையை நிரூபிக்கலாம்.

More articles

Latest article