மேற்குவங்க மாநிலத்தில், 8வது மற்றும் கடைசிக்கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் வெளியாக ‘எக்ஸிட் போல்’ கருத்துக்கணிப்புகள், ஒட்டுமொத்த அளவில் பார்க்கையில், காங்கிரஸ் கட்சிக்கு எதிரானதாய் இருக்கிறது.

முக்கிய மாநிலமான கேரளாவில், மாறிமாறி ஆட்சி என்ற நடைமுறை, 40 ஆண்டுகளுக்குப் பிறகு, இத்தேர்தலில் உடையும் என்று கூறப்பட்டுள்ளது. அங்கு இடது முன்னணியே மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரியை எடுத்துக்கொண்டால், அங்கு, ரங்கசாமி+பாஜக கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தைப் பொறுத்தவரை, அங்கு, தற்போது ஆளும் பாஜகவே, மீண்டும் பெரிய வெற்றியைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஆக, காங்கிரஸ் கட்சி வலிமையாக இருக்கும் 2 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில், இத்தேர்தல் அக்கட்சிக்கு எதிரானதாகவே அமைவதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. கூட்டணி என்ற வகையில் பார்த்தால், தமிழ்நாட்டில் மட்டுமே காங்கிரஸ் இடம்பெற்றுள்ள கூட்டணி வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது.