டெல்லி: தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகளை இன்று மாலை 6.30 மணிவரை வெளியிடக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இன்றுடன் முடிவடையும்  நிலையில், மே 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கு  பிந்தைய கருத்து கணிப்புகளை இன்று மாலை 6.30 மணிவரை வெளியிடக் கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுச்சேரி, கேரளம் மற்றும் அஸ்ஸாம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் கடந்த ஏப். 9 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தன. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப். 23 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவுடன் நிறைவடைந்தது.

இதைத்தொடர்ந்து, மேற்கு வங்க மாநிலத்தில் முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு 23 ஆம் தேதி நடந்தது முடிந்த நிலையில், இன்று  இரண்டாம் மற்றும் இறுதிக்கட்டமாக 142 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வாக்குப்பதிவு   மாலை 6 மணி வரை நடைபெறும் நிலையில், அதன்பிறகே தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட வேண்டும் என இந்திய தேரதல் ஆணையம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன் பிரிவு 126A (1)-இன்படி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் காலகட்டமான ஏப்ரல் 9 காலை 7 மணிமுதல் ஏப்ரல் 29 மாலை 6.30 மணிவரை கருத்துக் கணிப்புகளை வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று மாலை 6.30 மணிவரை தொலைக்காட்சி உள்பட அனைத்து ஊடகங்களும் கருத்துக் கணிப்புகளை வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது..

[youtube-feed feed=1]