சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி சூறாவளி பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், தேர்தல் களைப்பை போக்கும் வகையில் ஓய்வெடுக்க குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சென்றார்.

ஏற்கனவே முதல்வரின் மகனும், துணைமுதல்வருமான உதயநிதி ஓய்வெடுக்க துபாய்க்கு குடும்பத்துடன் பறந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினும் கொடைக்கானலுக்கு சென்றுள்ளார். 4 நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு ஏப்ரல் 29ஆம் தேதி மீண்டும் சென்னை திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடந்து முடிந்தது. தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தமிழ்நாடு முழுவதும் கோடை வெயிலை பொருட்படுத்தாது சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அதுபோல வேட்பாளர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதையடுத்து வாக்கு எண்ணிக்கை வரும் மே 4 ஆம் தேதி நடைபெறவுள்sது. இதனால், அரசியல் கட்சியினர் ஓய்வை தேடி, குளுகுளு வாசஸ்தலங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக , தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது ஓய்வு எடுப்பதற்காக இன்று தனது குடும்பத்தினருடன் கொடைக்கானல் செல்கிறார். இன்று காலை 10 மணி அளவில் தனது குடும்பத்துடன் சென்னை விமான நிலையம் செல்லும் ஸ்டாலின், அங்கிருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார்.
மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக கொடைக்கானல் சென்றடைகிறார். அங்கு தனியார் ஹோட்டலில் தங்கி நான்கு நாட்கள் ஓய்வெடுக்கும் முதலமைச்சர், வரும் ஏப்ரல் 29ஆம் தேதி மீண்டும் சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொடைக்கானில் முதலமைச்சர் தங்கும் இடத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், அங்கு ட்ரோன்கள் பறக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது. பொதுவாக தேர்தலுக்கு பிறகு ஸ்டாலின் கொடைக்கானலுக்கு சென்று ஓய்வெடுப்பது வழக்கம். இதனிடையே, நேற்றைய தினம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது குடும்பத்தாருடன் துபாய் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், மற்ற கட்சிகளின் தலைவர்களும், சில வேட்பாளர்களும் ஓய்வெடுப்பதற்காக, ஊட்டி, கொடைக்கானல் போன்ற கோடை வாசஸ்தலங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
[youtube-feed feed=1]