சேலம்:
சேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை டீன் தகவல் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், பணியாளர்கள் ஒருங்கிணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

முன்னதாக, கரோனா சிகிச்சைக்கான களப்பணியில் இருந்த மதுரை அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சண்முகப்பிரியா கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.

8 மாத கர்ப்பிணியாக இருந்தபோதும், கரோனா தொற்று தடுப்புப்பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டிருந்த மருத்துவர் சண்முகப்பிரியா உயிரிழந்த சம்பவம் மருத்துவர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.