முன்னாள் அமெரிக்க வெளியுறவு செயலாளர் கொலின் பவல் கொரோனாவால் உயிரிழப்பு

Must read

வாஷிங்டன்

முன்னாள் அமெரிக்க வெளியுறவு செயலாளர் கொலின் பவல் கொரோனாவால் உயிர் இழந்துள்ளார்.

அமெரிக்காவின் முதல் கறுப்பின அமெரிக்க வெளியுறவுச் செயலர் கொலின் பவல் பல வருடங்களாக அமெரிக்காவின் முன்னணி கறுப்பின பிரமுகர்களில் ஒருவராக இருந்தவர் ஆவார்.  இவர் அமெரிக்காவின்  தனித்துவமான தலைவர் என் அமெரிக்க மக்களால் போற்றப்படுபவர் ஆவார்.

அமெரிக்காவின் மூன்று குடியரசுத் தலைவர்களின் கீழ் கொலின் பவல்  பதவி வகித்துள்ளார்.  இவர் வியட்நாம் போர் முடிந்த பிறகு ஆற்றிய பணியால் பெரும் புகழை அடைந்தார்.  இதனால் இவர் அமெரிக்க ராணுவ தலைமை அதிகாரி பதவியை அடைந்தவர் ஆவார்.

இன்று இவர் கொரோனா  பாதிப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார்.   இவருடைய மறைவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் ராணுவ தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.   இவருடைய மறைவு அமெரிக்காவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொலின் பவலின் குடும்பத்தினர், “எங்கள் குடும்பத்தின் முக்கிய நபரான கொலின் பவல் ஒரு அன்பான கணவர், தந்தை, தாத்தா எனவும் மிகச் சிறந்த அமெரிக்கக் குடிமகனாகவும் விளங்கியவர் ஆவார்.  அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாதது” எனத் தெரிவித்துள்ளனர்.

 

More articles

Latest article