திருவனந்தபுரம்

ன்று கேரளா மாநிலத்தில் 6,676 மற்றும் மகாராஷ்டிராவில் 1,485 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 1,485 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 65,93,182 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 27 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,39,816 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 2,078 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 64,21,756 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 28,008 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 6,676 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 48,60,997 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 60 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 26,925 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 11,023 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 47,50,293 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 83,250 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.