டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, அவர் ஐசியூவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நெஞ்சுவலி காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மன்மோகன்சிங்கிற்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந் நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதை தொடர்ந்து அவர் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண தனி வார்டுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று சோதனை முடிவில் தெரிய வந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.