சென்னை: அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சட்டஅமைச்சர் சி.வி.சண்முகம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த சிவிசண்முகம், திண்டிவனத்தில் குடியிருந்து வருகிறார். அதிமுகவில் சசிகலா ஏற்படுத்தி வரும் குழப்பம் குறித்து, சசிகலாவை கடுமையாக விமர்சித்து வந்தார். இதையடுத்து, அவருக்கு கொலை மிரட்டல் வந்ததாகவும், அது தொடர்லபாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த நிலையில், சி.வி.சண்முகம், இன்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை உடனே சென்னையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அனுமதித்து உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில், சி.வி.சண்முகத்துக்கு, கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதாகவும், அதைத்தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.