ப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜப்பானில் அதிக நாட்கள் பிரதமராக பதவி வகித்தவர் ஷின்சோ அபே என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே,மேற்கு ஜப்பானில் உரையாற்றும் போது, அவர் மார்பில் சுடப்பட்டதாக முன்னதாக தகவல் வெளியாகியது.மேலும்,இது தொடர்பாக, ஜப்பானை தளமாகக் கொண்ட ஊடக நிறுவனமான NHK வெளியிட்டுள்ள செய்தியில், மேற்கு ஜப்பானில் உள்ள நாரா நகரில் பொதுமக்களிடையே முன்னாள்  பிரதமர் ஷின்சோ அபே  உரையாற்றிக் கொண்டிருந்த போது  திடீரென கீழே விழுந்தார். சம்பவ இடத்தில் இருந்த NHK நிருபர்  துப்பாக்கிச் சூடு போன்ற சத்தத்தைக் கேட்டதாகவும், அப்போது அபே உடலில் இருந்து ரத்தம் வெளியேறியதாகவும் தெரிவித்துள்ளது.

ஷின்சோ அபே மார்பின் மீது குண்டு பாய்ந்து, கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டதால் சுயநினைவை இழந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியிருந்தது. இதனால், ஆபத்தான நிலையில் முன்னாள் பிரதமர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்

இதற்கிடையில், ஷின்சோ அபேவை கொல்ல முயன்ற சுமார் 41வயது மதிக்கத்தக் நபரை காவல்துறையினர் கைது செய்துளளனர் என தகவல்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் அபே  உயிரிழந்து விட்டதாக தற்போதுகள் வெளியாகி உள்ளன. ஆனால், இது தொடர்பாக அந்நாட்டு அரசு எந்தவொரு அதிகாரப்பூர்வமான தகவலையும் வெளியிடவில்லை. இந்த சம்பவம் ஜப்பான் மக்களிடையே பெரும் பதற்றத்தையும்,பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள