புதுடெல்லி: 
ப்கானிஸ்தானில் இளம் குழந்தைகளைத் தாலிபான்கள் கொல்லும் அதிர்ச்சி அளிக்கும்  புகைப்படங்களை ஆப்கானிஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சர் மசூத் மசூத் அந்தராபி வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், தாலிபான்கள் மக்களைப் பயமுறுத்தி, ஆட்சி செய்ய முயல்கின்றனர். இளம் குழந்தைகள் மற்றும் வயதான முதியவர்களைக் கொலை செய்கின்றனர் என்று கூறியுள்ளார்.
இதுபோன்ற பயங்கரவாத முறைகளைப் பயன்படுத்தி நாட்டை ஆள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தாலிபான், எந்த காரணமும் இல்லாமல் மக்களைச் சிறைபிடித்து வைத்துள்ளனர். இதனால், மக்கள் தங்கள் உயிர் மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்கத் தாலிபான்களுக்கு எதிராகப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அந்தராப் பள்ளத்தாக்கிற்குள் உணவு மற்றும் எரிபொருளை எடுத்துச் செல்ல தாலிபான்கள் அனுமதிக்கவில்லை. இதனால், அங்கிருந்த ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகள் மலைப் பகுதிகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர்.  கடந்த இரண்டு நாட்களாக, தாலிபான்கள் குழந்தைகள் மற்றும் வயதானவர்களைக் கடத்திச் சென்று கேடயமாகப் பயன்படுத்துகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் தாலிபான்களால் கைப்பற்றப்பட்டது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது, இது, பல ஆப்கானியர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.