டெல்லி: உயர்வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே சீராய்வு மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், தற்போது திமுக சார்பிலும் சீராய்வு மனு அளிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் OBC பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு எஸ்.சி/ எஸ்.டி , MBC, BC வகுப்பினருக்கு அளிக்கும் இடஒதுக்கீடு போல 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறத.
இதுதொடர்பான வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில், மூன்று நீதிபதிகள், 10சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பளித்தனர். இதையடுத்து, தீர்ப்பை எதித்து காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு அளித்துள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது திமுக சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் அளித்த மனு மீதான விசாரணை வரும்போது, தங்கள் வாதத்தையும் கேட்க வேண்டும் என்பதே சீராய்வு மனுவின் நோக்கமாகும்.
திமுக அளித்த சீராய்வு மனுவில், 8 லட்சம் ஆண்டு வருமானமாக உள்ளவர்களை ஏழையாக கருதுவது தவறு. இந்த வழக்கை மீண்டும் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், முன்னேறி வகுப்பினருக்கு வழங்கப்பட்ட 10% இடஒதுக்கீட்டால் 133 கோடி மக்கள் பாதிப்படைகின்றனர். ஓபிசி , எஸ்சி ,எஸ்டி பிரிவினரை புறந்தள்ளி இடஒதுக்கீடு வழங்குவது சத்துவத்திற்கு எதிரானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.