சென்னை: ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு  கொரோனா தொற்று காரணமாக செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு உள்ளதாக இன்று காலை செய்திகள் வெளியான நிலையில், அவர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் புகைப்படத்துடன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

ஈரோடு கிழக்கு எம்எல்ஏ ஈ.வி.கே.இளங்கோவன் அவர்கள் கடந்த 15-ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் அவருக்கு மாரடைப்பு என கூறப்பட்டது. பின்னர், அவருக்கு கொரோனா பாதிப்பு என கூறி, தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு  XBB வகை கொரோனா பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் இயல்பான சுவாசம் மேற்கொள்ள முடியாமல் அவதிபட்டதாகவும்,  அவருக்கு கொரோனா பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் இயல்பான சுவாசம் மேற்கொள்ள முடியாததால்,  ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை சமநிலைப்படுத்த செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இளங்கோவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் பரவின.

இந்த நிலையில், தற்போது  ஈவிகேஎஸ் இளங்கோவன்,  கொரோனாவில் இருந்து மீண்டு விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் இருதய பிரச்சினை தொடர்பாக ஐ சி யூ-வில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.