தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மருத்துவமனையில் இருந்து இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மூச்சுத் திணறல் மற்றும் நெஞ்சுவலி காரணமாக மார்ச் 15 ம் தேதி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகக் கூறப்பட்டது இதனால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து அனைத்து பரிசோதனைகளும் முடிந்து இன்று வீடு திரும்பினார்.