பிளிப்கார்ட் நிறுவனம் செலவுகளை குறைத்து சிறப்பாக செயல்பட 700 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய முன்னிலை இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் , தனது நிறுவனத்தின் செலவுகளை குறைப்பதற்கும், சிறப்பாக செயல்படுவதற்கும், சிறப்பாக பணிபுரியாத 700 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.இதுகுறித்து பிளிப்கார்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது:
சிறப்பாக செயல்படாத பணியாளர்களுக்கு, பணித்திறமையை மேம்படுத்த வாய்ப்பு வழங்கப்படும். அதன்பிறகும் செயல்படாத பணியாளர்கள், வெளியே வாய்ப்புகளை தேடிக்கொள்ள வேண்டும். இதை பிளிப்கார்ட் நிறுவனம் மட்டும் செய்யவில்லை. சந்தையில் அனைத்து நிறுவனங்களும் கடைப்பிடிப்பதுதான். மேலும் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு பதவி உயர்வுகளும், சம்பள உயர்வும் வழங்கப்பட்டுள்ளது, என்று கூறினார்.
flipcart
அண்ணா பல்கலைக்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு சார்ந்த இன்ஜினியரிங் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புக்கள் சமீபத்தில் துவங்கின. புதிதாக வந்த மாணவர்களுக்கு பேராசிரியர்கள், விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளை கூறி வருகின்றனர். இந்நிலையில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை அண்ணா பல்கலை., விதித்துள்ளது.
இதன்படி, மாணவ – மாணவிகள் கல்லூரி வளாகத்திற்குள் மொபைல் போன்கள் பயன்படுத்தக் கூடாது. வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தக் கூடாது. மாணவர்கள் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை கல்லூரிகளுக்கு ஓட்டி வரக் கூடாது. மாணவிகள் ஜீன்ஸ், டி-ஷர்ட், லெக்கின்ஸ், த்ரீ போர்த் போன்ற ஆடைகளை கல்லூரிக்கு அணிந்து வரக் கூடாது. கல்லூரி வளாகத்திற்குள் கூட்டம், கூட்டமாக ஆங்காங்கே நின்று பேசக் கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க பத்திரிக்கையான நியூயார்க் போஸ்ட், டிரம்ப்பின் மகள் மிலானியாவின் நிர்வாண படங்களை தனது முதல் பக்கத்திலும், உள் பக்கங்களிலும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ” தி ஆக்ளி ஆபீஸ்” ( The Ogle Office) என தலைப்பிட்டு மிலானியாவின் நிர்வாண படங்களுடன் கட்டுரை வெளியிட்டுள்ளது. இது போன்ற ஆற்றல்மிக்க அதிபர் வேட்பாளர் குடும்ப பெண்ணை நீங்கள் எங்கும் பார்க்க முடியாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1995 ம் ஆண்டு பிரெஞ்ச் வார இதழ் ஒன்றிற்காக மிலானியா இந்த போட்டோவுக்கு போஸ் கொடுத்ததாக கூறப்படுகிறது.
1trump
இந்த படங்கள் குறித்து டிரம்ப்பிடம் கேட்ட போது, மிலானியா ஒரு புகழ்பெற்ற மாடல். அவர் பல வார இதழ்களுக்காக இது போன்று பல படங்களை எடுத்துள்ளார். அதே போன்று எனக்கு தெரிந்து தான் இந்த போட்டோவும் எடுக்கப்பட்டது. ஐரோப்பாவில் இது போன்ற படங்கள் மிகவும் சாதாரணம். மிகவும் பேஷனாக கருதப்படுகிறது என தெரிவித்துள்ளார். இதனால் தற்போது மிலானியாவின் நிர்வாண படங்களும், அதற்கு டிரம்ப் அளித்துள்ள பதிலும் தான் அமெரிக்காவில் தலைப்புச் செய்தி போல் பேசப்பட்டு வருகிறது.
உத்திர பிரதேசத்தில் அரசு பங்களாக்களில் தங்கி இருந்தால் முன்னாள் முதல்வர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. உ.பி.,யில் 6 முன்னாள் முதல்வர்கள் அரசு பங்களாக்களில் தங்கி இருப்பதாகவும், பல முறை நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் வெளியேறவில்லை எனவும் லோக்பிரஹாரி அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், 6 முன்னாள் முதல்வர்களும் 2 மாதங்களுக்குள் அரசு பங்களாக்களை காலி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த முன்னாள் முதல்வர்கள் பட்டியலில் ராஜ்நாத் சிங், என்.டி.திவாரி, மாயாவதி, எம்.எஸ்.யாதவ், ராம் நரேஷ் யாதவ் மற்றும் கல்யாண் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் நகரின் புறநகர் பகுதியில் உள்ள வெளிநாட்டு ஒப்பந்ததாரர்கள் தங்கியிருந்த வீட்டு வளாகம் ஒன்றின் மீது நடந்த தாக்குதல் முடிவுக்கு வந்துவிட்டதாக காபூல் நகர போலீசார் தெரிவித்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் திருமணத்தில் மண மேடைக்கு, மண மகன் குடித்துவிட்டு தள்ளாடிய நிலையில் வந்ததான், மணமகள் திருமணத்தை நிறுத்தினார்.
vijayaதுலாம் ராசியை சேர்ந்தவர் விஜயகாந்த். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த அவருக்குகுரு பகவான், 12ம் இடமான விரய ஸ்தானத்திற்கு செல்கிறார். இதுவரை அவர் பெற்ற பதவி, பணம், செல்வாக்கு ஆகியவற்றை இழக்க வேண்டிய நிலை உருவாகலாம். எனினும் குருவின், 7ம் பார்வை படுவதால், பெரிய அளவிலான இழப்புகள் ஏற்படாது என்பது ஆறுதல் செய்தி. உடல் நிலையில் இதுவரை இருந்த உபாதைகளிலிருந்து விடுபடலாம். திடமான முடிவுகளை எடுக்கும் நிலை உருவாகும். வரும் உள்ளாட்சி தேர்தல் அவருடைய கட்சிக்கு ஓரளவிற்கு சாதகமான முடிவுகளை தரும். இவ்வாறு ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
அரியானா மாநிலத்தில் வீட்டுப் பாடம் செய்யாத மாணவர்களை சங்கிலியால் கட்டிப்போட்டு கொடுமைப்படுத்திய ஆசிரியர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
ஆப்பிரிக்க  நாடான துனிசியாவில் பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றிப் பெற்றதை அடுத்து பிரதமர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகை: கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு. குமரி மாவட்டம், கோழிபோர்விளையில் வா்த்தக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு மத்தியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு குடி மகன்களால் தினமும் பல்வேறு பிரச்சனைகளும் இடையூறுகளும் ஏற்படுகிறது.
 
சித்தூர் அடுத்த என்.ஆர்.பேட்டையில் காரில் கடத்தி கொண்டுவரப்பட்ட செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.1 கோடி மத்திப்பிலான செம்மரக்கட்டைகளை கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அடுத்த 3 நாட்களுக்கு அனைத்து உறுப்பினர்களும் மாநிலங்களவையில் இருக்க வேண்டும் என்றும் மாநிலங்களவையில் அனைவரும் பங்கேற்க கட்சி எம்.பி.க்களுக்கு பாரதிய ஜனதா கட்டளையிட்டுள்ளது. மாநிலங்களவையில் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாகிஸ்தானில் நடைபெறும் சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார். இந்நிலையில் இது குறித்து உயர்மட்டக் குழுவினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய உள்துறை செயலாளர், ஐ.பி., தலைவர், ரா தலைவர், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.
சென்னையில் பல்வேறு இடங்களில் செயின், பணம், செல்போன் பறிப்பு: பைக்கில் தப்பிய மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை.
சென்னை அருகே பெருங்குடியை சேர்ந்த பள்ளி ஆசிரியை ராஜாமணி, நேற்று இரவு வீட்டின் வெளியே நின்றிருந்தார். அப்போது, மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை பறித்துச்சென்றனர்.
நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்த மல்லிகா, நேற்று காலை வீட்டின் முன்பு கோலம் போடும் போது பைக்கில் வந்த மர்ம நபர், மல்லிகாவின் கழுத்தில் இருந்த செயினை பறித்துச்சென்றனர்.
மயிலாப்பூர் சேர்ந்த அமுதா, நேற்று வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த செயினை பறித்துச்சென்றனர்/
chain
சோழிங்கநல்லூரில் தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வருபவர் பிரவீண். நேற்றிரவு வேலை முடிந்து பைக்கில் வீட்டிற்கு வரும் போது, வழி மறித்த மர்ம நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி, செல்போன் மற்றும் பணத்தைப் பறித்துச் சென்றனர். சென்னையில் பல்வேறு இடங்களில் ஒரே நாளில் செயின் பறிப்பு, பணம் பறிப்பு நடந்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த புகாரிகளின் பேரில் போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
ஷீனா போரா கொலை வழக்கு: இந்திராணி உள்ளிட்ட 2 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு
பீகார் பொதுத்தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட ரூபி ராய்க்கு ஜாமீன்
சத்தீஸ்கர் மாநிலத்தில் இருவேறு சம்பவங்களில் பொதுமக்கள் 2 பேர் நக்சல்களால் கொல்லப்பட்டனர். கான்கேர் என்ற இடத்தில் ஒருவரும், பீஜப்பூர் பகுதில் ஒருவரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநிலங்களவை மூத்த உறுப்பினர் சிவாவை சசிகலா புஷ்பா தாக்கியது கண்டனத்துக்குரியது என்றும் திருச்சி சிவாவை தாக்கியது தவறான செயல் என்பதை முதலில் சசிகலா புஷ்பா உணர வேண்டும் என்றும் இந்திய கம்ம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது.
ராஜிவ் கொலையாளிகள் மனு இன்று விசாரணை
குஜராத் அரசு ஊழியர்களுக்கு 7 வது சம்பள கமிஷன்
ஆப்கானிஸ்தானின் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் உள்ள 70 சதவீதம் பேர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என அமெரிக்க ராணுவ தலைவர் தெரிவித்துள்ளார். இவர்கள் பாக்., தாலிபன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஜெயலலிதாவும், சசிகலாவும் என்னை நிர்பந்தபடுத்தி ராஜினாமா கடிதம் எழுதி வாங்கினார்கள்! செல்போனை பறித்தனர். திமுக, காங்கிரஸிற்கு நன்றி! யாருக்கும் பயப்படமாட்டேன். என் குடும்பத்தார்க்கு மிரட்டல் வருகிறது. எனது செயல் காரணமாகதான் மக்கள் என்னை தேர்ந்தெடுத்தனர். தம்பித்துரையின் மூலம் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பே ராஜினாமா எழுதி வாங்க முயற்சி செய்தனர். திருச்சி சிவா விவகாரம் தனி! யாருக்கோ நன்மை செய்ய என்னை ராஜினாமா செய்ய வைக்க முயற்சி! கலிபூங்குன்றன் உள்ளிட்ட அனைவரும் என்னை மிரட்டினர். போயஸ் கார்டனில் அடைத்து வைத்து விமானத்தில் அழைத்து வந்து அவைத் தலைவரிடம் ராஜினாமா கொடுக்க முயற்சி!