15-வது ஐரோப்பிய கால்பந்து போட்டி (யூரோ) பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு முதலில் லீக்கில் மோதுகின்றன.
தோலோஸ் நகரில் நேற்று அரங்கேறிய ‘இ’ பிரிவு இத்தாலி மற்றும் ஸ்வீடன் அணிகள் மோதின. ஆரம்பம் முதல் இரு அணிகளும் எளிதில் கோலை நெருங்க முடியவில்லை. டிராவில் முடியும் என எதிர்பார்த்த சமயத்தில் 88வது நிமிடத்தில் இத்தாலியின் ஈடர், சுவீடனின் தடுப்பு ஆட்டக்காரர்கள் மற்றும் கோல் கீப்பரை தண்டி அருமையாக கோல் அடித்தார். இந்த கோல் மூலம் இத்தாலி வெற்றிபெற்றது. முந்தய போட்டில் பெல்ஜியத்தை தோற்கடித்து இருந்த இத்தாலி அணி இந்த 2-வது வெற்றியின் மூலம் கால்இறுதிக்கு முந்தைய 2-வது சுற்றுக்குள் நுழைந்தது.
FotorCreated57574
செக் குடியரசு மற்றும் குரோஷியா குரூப் டி பிரிவு போட்டில் மோதின. வீருவீறுப்பான நடந்த போடில் இரு அணிகளும் போட்டி முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் சமமாக இருதனர். இந்த போடில் குரோஷியா ரசிகர்கள் போட்டி மைதானத்தில் படசுகள் துக்கி எரிய போட்டி சற்ற பரபரப்புடன் முடிந்தது.
குரூப் டி போட்டில் ஸ்பெயின் மற்றும் துர்கி அணிகள் மோதின பலம் வாய்ந்த ஸ்பெயின் அணி துர்கி அணியை 3-0 என்ற ஸ்கோர் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்குள் நுழைந்தது.
இன்றைய ஆட்டத்தில் குரூப் இ பிரிவில் பெல்ஜியம் – அயர்லாந்து மற்றும் குரூப் எஃப் ஐஸ்லாந்து – ஹங்கேரி; போர்ச்சுகல் – ஆஸ்திரியா போட்டிகள் நடைபெறுகிறது.