தேனி:

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையின் பகுதியான குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற புதுமணத் தம்பதி காட்டுத்தீயில் சிக்கி பரிதாபமாக பலியானர்.

இது அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சோகமான நிகழ்வில் ஈரோடு பகுதியை சேர்ந்த விவேக் , திவ்யா தம்பதியினரில் விவேக் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார். திவ்யா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 100 நாட்களே ஆகி உள்ள நிலையில் அவர்கள் விபத்தில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குரங்கணி மலைப்பகுதிக்கு டிரெக்கிக் சென்றவர்களில் 9 பேர் காட்டுத்தீயில் சிக்கி பலியான நிலையில், மேலும் 6 பேர் அபாயகரமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இநநிலையில், டிரெக்கிக் சென்றவர்களில் சென்னை மட்டுமல்லாது,  ஈரோடு கவுந்தப்பாடியைச் சேர்ந்த விஜயா, விவேக், அவரது நண்பர் தமிழ் செல்வன் ஆகியோர் தீ விபத்தில் உயிரிழந்து விட்டனர்.

விவேக்கின் மனைவி திவ்யா உயிரிழந்து விட்டதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால், 90 சதவிகித காயங்களுடன், உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த இளம் தம்பதிகள் குறித்த் தகவல்கள் வெளியாகி உள்ளது.

விவேக் துபாயில் வேலை பார்த்து வந்ததாகவும், அதுபோல திவ்யா கோபிச்செட்டிபாளையத்தில் கல்லூரி விரிவுரையாளராக பணி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இருவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம்தான் திருமணம் நடைபெற்றதாகவும், சமீபத்தில்தான் அவர்களின் 100வது திருமண நாள் கொண்டாடியதாக தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள நிலையில், விரைவில் துபாய்க்கு திரும்ப உள்ள நிலையில், தனது மனைவிடன் சந்தோஷமாக பொழுதை கழிக்க எண்ணி விவேக் திவ்யா தம்பதியினர் ,வனப்பகுதிக்கு வந்து இரண்டு நாட்கள் சந்தோஷமாக கழித்ததாகவும், அதைத்தொடர்ந்து இருவருமே கொழுக்குமலை பகுதிக்கு மலையேற்றப் பயிற்சிக்கு சென்றுள்ளனர்.

தாங்கள் இருவரும் வனப்பகுதியில் ஜோடிப்பறவைகளாக  உற்சாகமாக சுற்றியுள்ள படங்களையும் தனது  முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள விவேக், பயிற்சியை முடித்துக்கொண்டு திரும்பும்போது காட்டுத்தீயில் சிக்கியதாகவும், இதில்  விவேக், தமிழ் செல்வன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்து விட்ட நிலையில்,  திவ்யா 90 சதவிகித காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

சுமார் 90 சதவிகிதம் தீக்காயங்களுடன்  மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திவ்யாவின் உடல்நிலை, மோசமாக இருப்பதாகவும், அவர் உயிரைபிழைப்பது கடினம் என்றும் கூறப்படுகிறது.