ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற்ற கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்தது. இன்று காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மாலை 6மணியுடன் முடிவடைந்தது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. முக்கிய கட்சிகளின் 4 வேட்பாளர்கள் உள்பட 77 பேர் களத்தில் உள்ளனர். கடும் போட்டிகளுக்கு இடையே இன்று வாக்குப்பதிவு, அந்த தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த 238 வாக்குச் சாவடிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று முடிந்தது.
காலை 7மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6மணியுடன் முடிவடைந்தது. மேலும், 6மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – மாலை 5 மணி நிலவரப்படி 70.58% வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் இதுவரை 1.60 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.
இதையடுத்து தேர்தல் முகவர்கள் முன்னிலையில், வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு சீல் வைக்கப்பட்டு பணிநடைபெற்று வருகிறது. அதையடுத்து, வாக்குபெட்டிகள், வாக்கு எண்ணும் மையத்துக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படும்.
வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.