மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக டாக்டர் பிரசாந்த் லவானியா நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் தோப்பூரில் 224 ஏக்கரில் இடம் ஒதுக்கப்பட்டது. மேலும், ரூ. 1264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 750 படுக்கை வசதிகள் கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை 45 மாதங்களில் கட்டி முடிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. பிரதமர் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 27 அன்று மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய அடிக்கல் நாட்டினார். ஆனால், பல்வேறு சிக்கல்களால் மருத்துவமனைக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் ஒருவர்மீது ஒருவரை குற்றம் சாட்டி வருகிறது.

இதையடுத்து,  மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்காக ஜப்பானை சேர்ந்த ஜைக்கா நிறுவனம் ஒதுக்கியுள்ளது. இதுவரை மத்திய அரசு ரூ.12.35 கோடியை மட்டுமே விடுவித்துள்ளது. முதல் கட்டமாக 1,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. கட்டுமான பணிகள் தாமதமாகிய நிலையில், இந்த நிதியை அதிகரித்து ரூ.1,977 கோடியாக அறிவித்தது. மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் இதுவரையில் ரூ.12.35 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தற்போது  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக டாக்டர் பிரசாந்த் லவானியா நியமிக்கப்பட்டுள்ளார். இவர்  உத்தரபிரதேசத்தின் சரோஜினி நாயுடு மருத்துவக் கல்லூரி பேராசிரியராக இருந்து வந்த நிலையில், தமற்போது மதுரை எய்ம்ஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே மதுரை எய்ம்ஸ் தலைவராக இருந்த டாக்டர் நாகராஜன் வெங்கட்ராமன் காலமானதை அடுத்து டாக்டர் பிரசாந்த் லவானியா நியமிக்கப்பட்டு உள்ளனர்.