ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 5 மணி நிலவரப்படி 70.58 வாக்குப்பதிவாகியுள்ளது என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதுபோல,  நாகலாந்தில் – 72.99%, மேகாலயாவில் – 63. 91% வாக்கு பதிவாகியுள்ளதாக தேர்தல் அணையம் தெரிவித்துள்ளது.

 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை 7:14 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதன் வாக்களித்தார்.  அவரைத்தொடர்ந்து வாக்களிப்பதற்குக் கட்சி வேட்டி துண்டுடன் வந்த தேமுதிக வேட்பாளர் ஆனந்தை தேர்தல் அதிகாரிகள் மறுத்தனர். பின்னர், மாற்று உடையில் மீண்டும் வந்த தேமுதிக வேட்பாளர் ஆனந்த் தனது வாக்கினை பதிவு செய்தார்.

அதைத்தொடர்ந்து, கச்சேரி வீதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வாக்களித்தார். இந்த நிலையில், வாக்காளர்களுக்கு வைக்கப்படும் மை அழிவதாக அதிமுகவினர் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்தனர். அதன் பேரில், வாக்கு மை அழிவதாக அளித்த புகாரில் தீர்வு காணப்பட்டதாகச் செய்தியாளர்களிடத்தில் தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, ஈரோடு கருங்கல்பாளையம் கல்லுபிள்ளையார் கோயில் வாக்குச்சாவடியில் அதிமுக வேட்பாளர் தென்னரசு தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். இந்நிலையில், இடையன்காட்டு வலசு பகுதியில் வாக்குச்சாவடி எண் 138,139 ஆகிய இடங்களில் பணப்பட்டுவாடா நடந்ததாகத் தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலம் அதிமுகவினர் புகார் அளித்தனர். மேலும் ஒரு பகுதியில் ரூ.4000 வழங்குவதாகவும் புகார்கள் எழுந்தன.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 5 மணி நிலவரப்படி 70.58 வாக்குப்பதிவாகியுள்ளது என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதுபோல,  நாகலாந்தில் – 72.99%, மேகலயாவில் – 63. 91% வாக்கு பதிவாகியுள்ளதாக தேர்தல் அணையம் தெரிவித்துள்ளது.