ஈரோடு:  அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்குறித்து இன்று 2வது நாளாக அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், எடப்பாடி தரப்பு எம்எல்ஏக்கள், மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதையடுத்து, ஆலோசனை கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தேர்தல் பணிக்குழுவில் கூடுதல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்படுவதாக கூறியவர், சிலர் எட்டப்பன் வேலை பார்த்து வருகிறார்கள். கட்சிக்கு விரோதமாக  செயல்படுவோருக்கு இடைத்தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நமக்கு முக்கியமானத என்றவர். சோதனை நமக்கு புதிதல்ல. நாம் ஒற்றுமையுடன் இணைந்து தேர்தலை  எதிமர்கொள்வோம் என்றார்.

தொடர்ந்து, பேசியவர் அதிமுக தேர்தல் பணிக்குழுவில் கூடுதல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்று கூறியவர், ஈரோடு இடைத்தேர்தல் கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக ஏற்கனவே செங்கோட்டையன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பணிக்குழுவில், முன்னாள் அமைச்சர்கள், வளர்மதி, பாஸ்கரன், முன்னாள் எம்.பி.க்கள் கோபால், ரத்தினவேல், முன்னாள் எம்எல்ஏ ஆசைமணி ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள் என்றார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக தேர்தல் பணிக்குழுவில் கூடுதல் பொறுப்பாளர்களை எடப்பாடி பழனிசாமி நியமித்தார். ஏற்கனவே 111 பேர் தேர்தல் பணிக்குழுவில் உள்ள நிலையில் கூடுதலாக 6 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கோபால், எஸ்.வளர்மதி, ரத்தினவேல், ஆசைமணி, சிவா.ராஜமாணிக்கம், பாஸ்கரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக  வேட்பாளராக தென்னரசு, ராமலிங்கம், நந்தகுமார் ஆகிய 3 பேரில் ஒருவரை களமிறக்க பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் – 2023 தேர்தல் பணிக்குழு கூடுதல் பொறுப்பாளர்கள் நியமனம் ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் 27.2.2023 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுடன், கீழ்க்கண்டவர்களும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் பணியாற்றுவார்கள். டாக்டர் K. கோபால், Ex. M.P., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் திருமதி S. வளர்மதி, கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு. T. ரத்தினவேல், Ex. M.P., , கழக அமைப்புச் செயலாளர் திரு. S. ஆசைமணி, Ex. M.L.A., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் திரு. சிவா. ராஜமாணிக்கம், கழக அமைப்புச் செயலாளர் திரு. G. பாஸ்கரன் முன்னாள் அமைச்சர் நியமிக்கப்படுகிறார்கள்.

அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு, கழக நிர்வாகிகளும், ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் முழு ஒத்துழைப்பு நல்கி, சிறப்பான முறையில் தேர்தல் பணிகளை ஆற்றி, கழக வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.