சென்னை: அதிமுக பொதுக்குழு  தொடர்பான தனி நீதிபதியன் உத்தரவை எதிர்த்து, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுமீதான விசாரணை இன்று நடைபெற்று முடிந்த நிலையில், நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.

அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக, எடப்பாடி கூட்டிய பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் உயர்நீதிமன்றம், உச்சநீதி மன்றங்களில் வழக்கு போட்டார். இந்த வழக்கில் இபிஎஸ் ஜூன் 11ந்தேதி பொதுக்குழுவை கூட்டலாம் தனி நீதிபதி உத்தரவு அளித்தார். இதையடுத்து அதிமுக பொதுக்குகூடி, பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது. ஒபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன், அதிமுகவில் ஜூன் 23-ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்கும் என்றும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும் எனவும்  தீர்ப்பளித்தார். எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது என்றும் உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து,   ஈபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் இன்று நடைபெற்றது. விசாரணையின்போது,  ஓபிஎஸ், ஈபிஎஸ் மற்றும் வைரமுத்து ஆகிய மூன்று தரப்பில் காரசாரமான வாதங்கள் வைக்கப்பட்டன. அவர்களின் வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்.

மேலும், எழுத்துப்பூர்வ வாதங்களை நாளைக்குள் தாக்கல் செய்ய அனைத்து தரப்புக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.