கொல்கத்தா:

குடியுரிமைச் சட்ட திருத்த பிரச்சினையால் வடகிழக்கு மாநிலங்கள் பற்றி எரிந்து கொண்டிருப்பதாக, மிஜோரம் தேசியவாத கட்சித் தலைவரும், மிஜோரம் சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவருமான லால்துஹாப்மா குற்றஞ்சாட்டியுள்ளார்.


மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி நடத்திய எதிர்கட்சிகள் பங்கேற்ற மெகா பேரணியில் அவர் பேசியதாவது:

குடியுரிமைச் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றினால் நிலைமை வேறு மாதிரியாகிவிடும். பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் வரலாற்றை திரித்து எழுத முயற்சிக்கிறார்கள்.

இந்த மசோதாவால் வடகிழக்கு மாநிலங்களில் பிரச்சினை பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்த மசோதா நிறைவேறினால், இந்தியா மதசார்பற்ற நாடாக இருக்காது. நமக்கு மத்தியில் மதச் சார்பற்ற அரசுதான் தேவை என்றார்.

இதற்கு பதில் அளித்துப் பேசிய மம்தா பானர்ஜி, குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு தமது கட்சி எதிராகவே வாக்களிக்கும் என தெரிவித்தார்.

 

 

[youtube-feed feed=1]