சென்னை,

மிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலில் நடிகர் ரஜினிகாந்த், ரஜினி பேரவை என்ற புதிய வலைதளத்தை தொடங்கி உள்ளார். அதன்மூலம் உறுப்பினர்கள் சேர்ப்பு நடைபெற்று வருகிறது.

ரஜினி சமீபத்தில் அரசியலக்கு என  தனி அலுவலகம் பார்த்துள்ள நிலையில, தற்போது இணைய தளம் தொடங்கி இருப்பது ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்று நம்பப்படுகிறது.

இதைத்தொடர்ந்தே ரஜினிகாந்த் அரசியலில் நுழைவதற்கான தொடக்கமாக, ரஜினி பேரவை என்ற  இணைய தளத்தை அவரது ஆதரவாளர்கள் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இணையதளத்தில்,

என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள். இது நமது மக்கள் பணிக்கான செய்தி மற்றும் தகவல் தொடர்பு சம்பந்தப்பட்ட ஆக்கப்பூர்வ சேவை. நமதுஆடியோ, வீடியோ மற்றும் உரை சம்பந்தமான தொகுப்புக்களை இங்கே பார்க்கவோ, கேட்கவோ, பதிவிறக்கம் செய்யவோ முடியும். தங்களது கருத்துக்களை நீங்கள் இங்கு எழுதி வைக்கவோ, பகிர்ந்து கொள்ளவோ செய்யலாம். எமது ஊடக மேலாண்மைக்குழு தங்களது கருத்துக்களை தொடர்ந்து கண்காணித்து, ஆராய்ந்து முடிந்தவரையில் உரிய பதிலை தங்களுக்கு வழங்கும். நமது இந்த முயற்சி வெற்றி பெற உங்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன்.

நன்றி! வணக்கம்!

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

http://rajiniperavai.org/

ஏற்கனவே, அரசியல் கட்சி தொடங்க தனியாக அலுவலகம் பார்ததுள்ள நிலையில், தற்போது இந்த புதிய இணைய தளம் தொடக்கம் ரஜினி அரசியல் பிரவேசம் உறுதி என்று கூறப்படுகிறது.