ராஜஸ்தானை கைவிட்ட இங்கிலாந்து ஜாம்பவான்கள்!

Must read

மும்பை: 222 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை விரட்டிவரும் ராஜஸ்தான் அணிக்கு, பெரியளவில் கைகொடுக்க வேண்டிய இங்கிலாந்து ஜாம்பவான்களான பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் தேவையான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் அணியை கைவிட்டனர்.

ராஜஸ்தான் அணியின் துவக்க வீரராக களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ், முகமது ஷமியின் பந்தில் டக் அவுட்டாகி அணியை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அவர் 3 பந்துகளை சந்தித்தார்.

பின்னர், 4வது வீரராக களமிறங்கி சற்று அதிரடி காட்டிய ஜோஸ் பட்லர், 25 ரன்களுக்கெல்லாம் நடையைக் கட்டினார். 13 பந்துகளை சந்தித்த அவர், 5 பவுண்டரிகளுடன் 25 ரன்களை அடித்தார்.

தற்போது, கேப்டன் சஞ்சு, களத்தில் நிற்கிறார். ஆனாலும் அவர் இதுவரை அதிரடியாக ஆடவில்லை. 29 பந்துகளை சந்தித்துள்ள அவர், 39 ரன்களை மட்டுமே எடுத்து களத்தில் உள்ளார். அவருடன் ஷிவம் துவே இணைந்துள்ளார்.

இங்கிலாந்து அணி, தற்போதைய நிலையில் 10 ஓவர்களில் 95 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. வெற்றிபெற, 60 பந்துகளில் 127 ரன்களை எடுத்தாக வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளது அந்த அணி.

 

 

 

 

 

More articles

Latest article