சென்னை
அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி படிப்பதற்கான கல்விக் கட்டணத்தை ரத்து செய்து பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் தமிழகம் முழுவதும் 46 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இஅரசுப்பள்ளியில் தமிழ்வழியில் பயில்பவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் இருந்து விலக்கு தரப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது ஆங்கில வழிக்கல்வி படிக்கும் மாணவர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கடந்த ஜூலை 2-ம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சசர் செங்கோட்டையன் தமிழக சட்டப்பேரவையில் தெரிவித்திருந்த நிலையில், தற்போது, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
தமிக பள்ளிக் கல்வித் துறை செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது,
தேசிய அள விலான பல்வேறு போட்டித் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ள ஏதுவாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங் கில வழிக்கல்வியில் படிக்கும் மாணவர்களின் கல்விக்கட்ட ணத்தை ரத்து செய்ய வேண்டு மென பள்ளிக்கல்வி இயக்குநர் அரசுக்கு பரிந்துரை செய்தார்.
இதை நன்கு பரிசீலனை செய்து தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டு முதல் 6 முதல் 12-ம் வகுப்பு வரை (ஆங்கில வழி) கல்விக்கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், 2019-20-ம் கல்வி ஆண்டில் ஆங்கில வழிக்கல்வியில் பயிலும் 22,314 மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட கல்விக்கட்டணம் ரூ.67 லட்சமும் திரும்ப ஒப்படைக்கப் படும்.
இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.