மேட்டூர்:

மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து, விநாடிக்கு 9 ஆயிரத்து 900 கனஅடியாக உள்ளது. இதன் காரணமாக அணையின் நீர் மட்டும் விரைவில் 50 அடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக உபரி நீரை, கர்நாடக அரசு காவிரியில் திறந்து விட்டுள்ளது. இந்த நீர், தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக, ஒகேனக்கல்லுக்கு வந்து மேட்டூர் அணையை வந்தடைகிறது.

நேற்று வினாடிக்கு 9,200 கனஅடியாக வந்த தண்ணீர், இன்று விநாடிக்கு 9,900 கனஅடியாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இன்றைய மேட்டூர் அணையில் நீர்மட்டம்  48.92 அடியாக உள்ளது. விரைவில் 50 அடி எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரியில் நீர் வரத்து அதிகரித்து வருவதால், ஒகேனக்கல்லலில் பாதுகாப்பை கருதி, பரிசல் இயக்க விதிக்கப்பட்டுள்ள  தடை நீடித்து வருகிறது.