இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 66 ரன்கள் வித்யாசத்தில் வெற்றிப்பெற்றது.

india

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி மும்பையில் இன்று முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

இந்திய அணி சார்பில் ரோட்ரிக்ஸ் மற்றும் மந்தனா தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோட்ரிக்ஸ் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மந்தனா 24 ரன்களிலேயே வெளியேறினார். அவர்களை தொடர்ந்து வந்த கேப்டன் மிதாலி ராஜ் 44 ரன்களும், பாட்டியா 25 ரன்களும், கோஸ்வாமி 39 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 49.4 ஓவரில் 202 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதையடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி வீராங்கனைகள் பேட்டிங் செய்தனர். அந்த அணியின் ஸ்கிவர் 44 ரன்களிலும், நைட் 39 ரன்களிலும் ஆட்டமிழக்க மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் இங்கிலாந்து அணி 136 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையு இழந்தது.

இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 66 ரன்கள் வித்யாசத்தில் இந்திய அணி வெற்றிப்பெற்றது.