லீட்ஸ்:
இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று, 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடர் சமநிலையானது.
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் உள்ள ஹெட்டிங்லேயில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணி இங்கிலாந்தின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெறும் 78 ரன்னில் சுருண்டது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுக்கு 423 ரன்கள் குவித்து மொத்தம் 345 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. 3 ஆம் நாள் ஆட்டம் இன்று காலை துவங்கியது. மேற்கொண்டு 9 ரன்கள் எடுத்த இங்கிலாந்து அணி கைவசம் இருந்த 2 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
இதனால், 354 ரன்கள் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 121 ரன்கள் குவித்தார். பந்து வீச்சில் இந்திய அணியில் முகம்மது சமி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, இந்திய அணி தனது 2 வது இன்னிங்சை துவங்கி விளையாடி, 278 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதையடுத்து இங்கிலாந்து அணி, ஒரு இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடர் சமநிலையானது.