கேப்டன்களில்  தோனியே மிகவும் சிறந்த கேப்டன் – டூ பிளசி

Must read

கொல்கத்தா: 
கிரிக்கெட்டில் எம்.எஸ்.தோனி மிகவும் சிறந்த கேப்டன் என்று சிஎஸ்கே வின் ஓபனிங் பேட்ஸ்மேன் டூ பிளசி  தெரிவித்துள்ளார்.
காயம் காரணமாக  2 மாத ஓய்வில் இருந்த  டூ பிளசி,  கரீபியன் பிரீமியர் லீக்கில் லூசியா கிங்ஸ் அணியின் கேப்டனாக விளையாட உள்ளார்.  கரீபியன் பிரீமியர் லீக் செப்டம்பர் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையடுத்து,  ஐக்கிய அமீரகத்தில் நடைபெற உள்ள மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளார்.
எம்.எஸ் தோனியின் தலைமையில் சிஎஸ்கே அணி வீரர்கள் எப்போதும் தங்களை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.  சிறந்த கேப்டன்களில் எப்போதும் முதல் இடத்தில் இருப்பவர் தோனி தான்.  தோனியிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன் என்று கூறினார்.
மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற உள்ளது. தற்போது சிஎஸ்கே அணி வீரர்கள் அனைவரும் ஐக்கிய அமீரகத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

More articles

Latest article