குழந்தைகளுக்கு தண்ணீர் தர இங்கிலாந்து ஹோட்டல்களுக்கு உத்தரவு

Must read

Vaishnavi Rajmohan
Vaishnavi Rajmohan is a biotechnologist by profession and a rationalist by practice. Her writing interests include literature, social and scientific articles.

பொதுவாக ஹோட்டல்களில் குடிதண்ணீர் கேட்பதற்கு கூச்சப்பட்டு தண்ணீர் குடிப்பதில்லை. குளிர்பானம் அருந்துவதால் உடல்பருமன் மற்றும் நீரிழிவு நோய் வருகின்றது.
england hotel water obesity
குழந்தைகளின் உடல் பருமனைத் தடுக்கும் பொருட்டு உணவு விடுதிகளில் இனி குழந்தைகளுக்கு இனி தண்ணீர் பரிமாறப்பட வேண்டுமென இங்கிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது.
குடிதண்ணீருக்கு பதிலாக குளிர்பானங்கள் குடிப்பதைத் தடுக்கும் பொருட்டு குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கேட்பதற்கு முன்னரே குடிதண்ணீர் மேசைமீது மரிமாறுவதன் மூலம் அவர்கள் குளிர்பானம் குடிப்பதைத் தடுக்க முடியும் என அரசு கருதுகின்றது. மேலும், சர்க்கரை வரி விதிப்பதன் மூலமும் இந்த சர்க்கரை அதிகமுள்ள பானங்கள் குடிப்பதை குறைக்க முடியுமென்றும் அரசு பரிந்துரைத்துள்ளது.
இந்தியாவில் சர்க்கரை வரி
உலக சுகாதார நிறுவனம் அறிவுரை
ஆய்வுத்தகவல் படி, துவக்கப்பள்ளி படிக்கும் குழந்தைகளில் 10ல் 1 குழந்தை உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளது.
 
இதுவே 10 வயது குழந்தைகளிடையே “ஐந்தில் ஒரு குழந்தை”உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
எனவே இன்கிலாந்து அரசு நடவடிக்கை எடுப்பதில் முனைப்பு காட்டியுள்ளது.
 
 

More articles

Latest article