ண்டன்

ரும் 2020 ஆம் ஆண்டில் 100 பந்து வீச்சுக்கள் கொண்ட தொடரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிமுகம் செய்கிறது.

கிரிக்கெட் என்றால் ஐந்து நாட்கள் டெஸ்ட் போட்டி திருவிழாவாக முதலில் இருந்தது.   இரு அணிகளும் தலா இரு இன்னிங்க்ஸ் அந்த ஐந்து நாட்களில் முடிக்க வேண்டி இருந்தது.   பல நேரங்களில் இந்த போட்டிகள் நேரம் இல்லாததால் டிராவில் முடிவடைந்து வந்தது.    அதை மாற்றி பிறகு ஒரு நாள் போட்டி அல்லது லிமிடெட் ஓவர் போட்டிகள் வந்தன.

இந்த போட்டிகளில் ஒவ்வொரு அணியும் தலா 50 ஓவர்கள் ஒரே நாளில் விளையாடி முடிக்க வேண்டி இருந்தன.    இந்தப் போட்டிகளில் டிரா என்பதற்கு வாய்ப்புக் குறைவு என்றாலும் ஒரு நாள்  போதுமானதாக இல்லை என ரசிகர்கள் கூறினர்.   அதன் பின்பு தற்போதைய டி 20 எனப்படும் ஒவ்வொரு அணிக்கும் 20 ஓவர்கள் என்னும் கிரிக்கெட் போட்டி வந்தது.

இந்த 20 ஓவர் போட்டி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள சமயத்தில் 100 பந்து வீச்சுகளைக் கொண்ட போடி ஒன்றை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிமுகம் செய்ய உள்ளது.  வரும் 2020ஆம் ஆண்டு அறிமுகம் செய்ய உள்ள இந்தப் போட்டிகளில் மொத்தம் 16 ஓவர்கள் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

முதல் 15 ஓவர்களின் தலா 6 முறையும் கடைசி ஓவரில் 10 முறையும் விசப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்தப் போட்டியில் 8 அணிகள் பங்கேற்கும் எனவும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.