உலகக்கோப்பை போட்டியில் தனது அடுத்த போட்டியை பங்களாதேஷ் அணிக்கு எதிராக தர்மசாலாவில் நாளை விளையாடுகிறது இங்கிலாந்து அணி.

இதற்காக தர்மசாலா சென்றுள்ள இங்கிலாந்து அணி நேற்று முதல் அங்கு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

தர்மசாலாவில் சனியன்று நடைபெற்ற முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியுடன் பங்களாதேஷ் அணி மோதியது. இதில் பங்களாதேஷ் வெற்றிபெற்றது.

ஆப்கானிஸ்தான் வீரர் முஜிப் உர் ரஹ்மான், தர்மசாலா

தர்மசாலா மைதானம் பல இடங்களில் மேடு பள்ளங்களாக உள்ளதாகவும் இதனால் பவுண்டரி லைனில் டைவ் அடித்து பீல்டிங் செய்வது கடினமாக இருந்ததாக இங்கிலாந்து வீரர்களுக்கு ஆப்கானிஸ்தான் வீரர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்றும் இன்றும் பயிற்சியில் ஈடுபட்ட இங்கிலாந்து அணி மைதானத்தின் நிலையைக் கண்டு பவுண்டரியில் நின்று பீல்டிங் செய்வது மிகவும் கடினம் என்பதை உணர்ந்ததோடு இதுகுறித்து தங்கள் பீல்டர்களையும் எச்சரித்துள்ளது.

இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் எல்லைக்கோட்டுக்கு அருகில் நின்று பீல்டிங்கில் ஈடுபடும் வீரர்களை கவனமுடன் இருக்குமாறு கூறியுள்ளதுடன் இந்த மைதானம் உலகக்கோப்பை போட்டி நடத்த தகுதியற்ற ஒன்று என்றும் விமர்சனம் செய்துள்ளார்.

2023 உலகக்கோப்பை துவக்க ஆட்டத்திற்கு உண்டான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்த நிலையில் அதன்பின் நிறைவேற்றப்பட்ட மகளிர் மசோதாவை கொண்டாடும் வகையில் அகமதாபாத் ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டிக்காக மகளிருக்கு இலவசமாக வழங்க 40000 டிக்கெட்டுகளை பாஜகவினர் பதுக்கியது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் இந்த தொடரில் எழுந்துள்ளது.

இந்த நிலையில், தர்மசாலா மைதானத்தின் தரம் குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் கேள்வி எழுப்பி இருப்பது பிசிசிஐ செயல்பாடு குறித்து மேலும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது.