சென்னை:

மிழகத்தில் பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித்துறை  அமைச்சர் கே.பி. அன்பழகன் வெளியிட்டார். விண்ணப்பித்த மாணவர்களின்  1,03,150 மாணவர்களின் தரவரிசை பட்டியலை வெளியிடப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து வரும் 25ந்தேதி முதல் கலந்தாய்வு தொடங்குகிறது.

நடப்பு கல்வி ஆண்டில் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை  தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் சார்பில் நடத்தப்படுகிறது. அதைத்தொடர்ந்து, பொறியியல் படிப்புக்கு  1.33 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.  விண்ணப்பித்த அனைத்து மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த  7-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 1 லட்சத்து 4 ஆயிரம் பேரின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதைத்தொடர்ந்து,  தரவரிசைப் பட்டியல்  உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனால் வெளியிடப்பட்டது. மேலும், விண்ணப்பதாரர்கள் தொழில்நுட்பக் கல்வி இயக்குநராக இணைய தளம் மூலம் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய தரவரிசையை பார்த்துத் தெரிந்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன்,  தரவரிசைப் பட்டியலை மாணவர்கள் பார்வையிட்டு குறைபாடுகள் அல்லது சந்தேகங்களைத் தெரிவிக்க நான்கு நாள்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. புகார்கள் எதுவும் இருந்தால் 044-22351014, 22351015 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு மாணவர்கள் தெரிவிக்கலாம்.

அதனைத் தொடர்ந்து ஜூன் 25-ல் கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது.