சென்னை: பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் இடம்  கிடைக்கும் என்று கூறிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நாளை கலந்தாய்வு தொடங்குவதாகவும், கலந்தாய்வு ஆன்லைன் மூலமே நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

பொறியியல் படிப்புக்கான பிஇ, பிடெக் ஆகிய படிப்புகளில் சேருவதற்கு கடந்த சில நாட்களாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. அதைத் தாடர்ந்து செப்டம்பர் 14-ஆம் தேதி (இன்று) தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று  நிலையில் தரவரிசை பட்டியல் வெளியாக உள்ளது.

இந்த நிலையில்,  தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,  பொறியியல் படிப்பில் சேர கடந்த அண்டை விட இந்த ஆண்டு 20,000 பேர் அதிகம் விண்ணப்பத்துள்ளனர். கடந்த  ஆண்டு தகுதியான விண்ணப்பம் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 406 இந்த வருடம் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 83 தகுதியான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

பொறியியல் படிப்புக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள   440 கல்லூரிகளில் 1லட்சத்து 51 ஆயிரத்து 870 மொத்த இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் தனியார் கல்லூரிகள், அரசு கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற உறுப்புக் கல்லூரிகள் அனைத்து கல்லூரிகளும் உள்ளடக்கம். இதனால், நடப்பாண்டு பொறியியல் படிப்புக்கு .  விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. முதல்கட்டமாக சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கும். பொறியியல் கல்லூரிகளில் காலியிடங்கள் நிரப்ப வேண்டும் என்பதற்காக ஐந்து முறை கவுன்சிலிங் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்,  அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தார்.

செப்டம்பர் 18-ம் தேதி பொறியியல் படிப்புக்கான மாணவர்  சேர்க்கை தொடர்பான  ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி  தொடங்கி வைப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.