சென்னை:

மிழகத்தில், ஆகஸ்டு 12ந்தேதி முதல், ஆன்லைனில் பொறியியல் கல்லூரிகளின் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ள  அண்ணா பல்கலைக்கழகம் அதற்கான அட்டவணையையும் வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் கடந்த 4 மாதங்களாக மூடப்பட்டு உள்ளது. இதனால், தற்போது ஆன்லைன் மூலம் வகுப்புகளை தொடங்க மத்தியஅரசு அறிவுறுத்தி உள்ளது.  வீடுகளில் முடங்கியுள்ள பள்ளி ,கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு எடுக்க தமிழக அரசால் முடிவு எடுக்கப்பட்ட நிலையில் அதற்கான ஏற்பாடுகளை முடுக்கி விடுள்ளது.

ஏற்கனவே பல தனியார் பள்ளி, கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கி உள்ள நிலையில், தமிழகத்திலும் அரசு பள்ளிகளில் டிவி மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தற்போது பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்பு குறித்து அண்ணா பல்கலைக்கழகம்  அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்பு ஆகஸ்ட் 12 முதல் ஆரம்பமாகும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அதன்படி பொறியியல் கல்லூரிகளின் ஆன்லைன் வகுப்பிற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.

அதன்படி,  ஆகஸ்டு 12ந்தேதி முதல்  அக்டோபர் 26 வரை ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்படும்.

செய்முறை தேர்வு அக்டோபர் 18 முதல் நவம்பர் 9ஆம் தேதி வரை நடைபெறும்.

இந்த ஆன்லைன் வகுப்பானது, முதலாமாண்டு மாணவர்களை தவிர, இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு நடைபெறும் என்றும், மேலும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் சனிக்கிழமைகளிலும் வகுப்பு நடைபெறும்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

[youtube-feed feed=1]