சென்னை:
றைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான  கருணாநிதியின் 2வது ஆண்டு நினைவு தினம் இன்று திமுகவினரால் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி ஆர் பாலு, கனிமொழி உள்பட  திமுக நிர்வாகிகளும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் (ஆகஸ்டு 5)  இன்று.  இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள  அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்து.
இன்று காலை நினைவிடம் வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி ஆர் பாலு, கனிமொழி உள்பட திமுக மூத்த நிர்வாகிகள் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  அதைத்தொடர்ந்து  திமுக நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர். கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு ஸ்டாலின் தலைமையில் குறைந்த அளவிலான நிர்வாகிகள் மட்டுமே வந்து அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டது.
எங்கெங்கும்கலைஞர் வீடியோ…  https://t.co/O9YOTSdG4k?amp=1
இதைத்தொடர்ந்து, கருணாநிதி நினைவிடத்தில் வைத்து கொரோனா காலகட்டத்தில் பணிபரிந்து வரும் முன்கள பணியாளர்களுக்கு  நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கருணாநிதியின் இரண்டாம் நினைவு தினத்தை முன்னிட்டு சர்வதேச இணையவழி மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் இப்போட்டியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மதியம் 12 மணி அளவில் தொடங்கி வைத்தார். இன்று ஆகஸ்ட் 7 முதல் 31ஆம் தேதி வரை 25 நாட்களுக்கு இந்த மாரத்தானில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.