டில்லி:
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராகி விளக்கவேண்டும் என்று மத்திய அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

ஐ .என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த வாரம் சிபிஐயால் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம், தற்போது சிபிஐ விசாரணையில் உள்ள நிலையில், அமலாக்கத்துறையும் அவருக்கு சம்மன் அனுப்பியது.

இதை எதிர்த்து, கார்த்தி சிதம்பரம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்ததன் அடிப்படையில் இதுபோன்ற சம்மன்களை அமலாக்கத்துறை அனுப்புவதற்கு எவ்வித அதிகார வரம்பும் கிடையாது. எனவே இந்த சம்மன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கூறி உள்ளார்.

இந்த வழக்கு  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.

இந்த வழக்கிலும் கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமின் கிடைக்குமா என்பது இன்று பிற்பகல் தெரிய வரும்.