பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஐந்து வாரங்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 மணிக்கும் சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9:30 மணிக்கும் ஒளிபரப்பாகிற பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இம்முறையும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர்.
1. மதுமிதா (ஆடை வடிவமைப்பாளர்)
2. இசைவாணி (கானா பாடகி)
3. அபிஷேக் (விமர்சகர்)
4. ராஜு ஜெயமோகன் (சீரியல் நடிகர்)
5. பிரியங்கா தேஷ்பாண்டே (தொகுப்பாளினி)
6. அபினய் வட்டி (நடிகர்)
7. சின்னப்பொண்ணு (நாட்டுப்புற பாடகி)
8. பாவ்னி ரெட்டி (சீரியல் நடிகை)
9. நாடியா சாங் (மலேஷியாவை சேர்ந்த மாடல் அழகி)
10. இமான் அண்ணாச்சி (நகைச்சுவை நடிகர்)
11. வருண் (நடிகர்)
12. ஐக்கி பெரி (ராப் பாடகி)
13. அக்ஷரா ரெட்டி (மாடல் அழகி)
14. நிரூப் நந்தகுமார் (நடிகர்)
15. நமீதா மாரிமுத்து (மாடல் அழகி)
16. சிபி சந்திரன் (மாஸ்டர் பட நடிகர்)
17. சுருதி ஜெயதேவன் (மாடல் அழகி)
18. தாமரைச் செல்வி (நாடக கலைஞர்)
இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர். இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா , சின்னப்பொண்ணு , சுருதி , மதுமிதா என பிக் பாஸ் வீட்டை விட்டு ஆறு பேர் வெளியேறினர்.
போட்டியாளர்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு, டீம் ஏ கண்ணாடியாக மாறி, டீம் பி-யினரை பிரதிபலிக்க வேண்டும் என பிக் பாஸ் அறிவித்தார்.
#Day47 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/qCkkNQgyQ6
— Vijay Television (@vijaytelevision) November 19, 2021
நேற்று இசைவாணிக்கும் , தாமரைக்கும் மோதல் ஏற்படுகிறது . இந்த மோதல் இன்றும் தொடர்வது இன்றைய முதல் ப்ரோமோவில் தெரிந்தது. அதில், ‘என் கேள்விக்கு என்ன பதில்’ என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அப்போது தாமரை – இசைவாணி இடையே போட்டி நடைபெறும் நிலையில் பிக் பாஸ் வீட்டில் நடந்த சில விஷயங்களின் அடிப்படையில் கேள்வி எழுப்பப்படுகிறது. அதற்கு பதில் தெரியவில்லை என்றால் எதிர்நபர் அவரது தலையில் முட்டையை உடைக்க வேண்டும் என கூறப்படுகிறது. இந்த டாஸ்கில் தாமரை – இசை இவரும் மாறி மாறி தலையில் முட்டையை உடைத்து கொள்கின்றனர்.
#Day47 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/jrZv94SKwC
— Vijay Television (@vijaytelevision) November 19, 2021
இரண்டாவது ப்ரோமோவில், “உள்ளே வெளியே” என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இதில் இமான் – ஐக்கி மற்றும் பிரியங்கா – ராஜு இடையே போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியிடும் இருவர் எதிரணியில் நின்று கொள்ள வேண்டும், நடுவில் ஒரு குடுவையில் தண்ணீர் நிரப்பட்டுள்ளது, இதற்குள் ஒரு சிறிய பந்தை போட வேண்டும் என கூறப்படுகிறது. பந்து குடுவையில் விழவில்லை என்றால் பாகற்காய் ஜூஸ் குடிக்க வேண்டும் என கூறப்படுகிறது.
#Day47 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/U9IIxsMSFW
— Vijay Television (@vijaytelevision) November 19, 2021
மூன்றாவது ப்ரோமோவில், ஏராளமான கிப்ட் பாக்ஸ்கள் உள்ளது. மேலும் டையஸ் வழங்கப்பட்டுள்ளது. இமான் டையஸை போட்டு அதில் வரும் எண்கள் அடிப்படையில் கிப்ட் பாக்ஸ்களை திறக்கிறார். முதலில் திறக்கும் பெட்டியில் சிக்கன் இருக்கிறது, இதனை பார்த்து ஹவுஸ் மேட்ஸ் உற்சாகமடைகின்றனர். இதனை தொடர்ந்து மற்றொரு பெட்டியை திறக்க அதிலிருந்து ஒரு நபர் வெளியே வருகிறார். இதனை பார்த்து இமான், தாமரை, பிரியங்கா ஆகியோர் அதிர்ச்சியில் இருக்கும் காட்சிகள் உள்ளது. அந்த நபர் இரண்டாவது நபராக வெளியேற்றப்பட்ட அபிஷேக் ராஜா போலவே தோற்றம் இருக்கிறது.