துபாய் இந்தியா இடையே 23 ந்தேதி முதல் விமான போக்குவரத்து மீண்டும் தொடக்கம்!

Must read

துபாய்: கொரோனா தொற்று பரவல் ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துபாய் இந்தியா இடையிலான விமானப் போக்குவரத்து  வரும் 23 ந்தேதி முதல் மீண்டும் தொடங்கும் என ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.  இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்ததை அடுத்து மீண்டும் இந்தியா மற்றும் துபாய் இடையேயான விமான போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஐக்கிய அரசு அமீரகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஜூன் 23 முதல் இந்தியா தென்னாப்பிரிக்கா, நைஜீரியா ஆகிய நாடுகளுக்கு மீண்டும் விமான சேவை தொடங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டு உள்ளது. விமானத்தில் பயணம் செய்யும் பணிகள் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களும் போட்டிருக்க வேண்டும். அதற்கான சான்றிதழ் கையில் வைத்திருக்க வேண்டுமென்றும்  என்று நிபந்தனை விதித்துள்ளது. ஆனால் இதற்கு ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் சோதனையிலிருந்து எதிர்மறை சோதனை சான்றிதழையும் அவர்கள் வழங்க வேண்டும். துபாய் அரசு விதிக்கும் 6 விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக எமிரேட்ஸ் இந்தியாவில் இருந்து 2021 ஜூலை 6 வரை பயணிகள் விமானங்களை நிறுத்தியது. ஆனால், தற்போது கொரோனா கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால்,  ஐக்கிய அரபு எமிரேட் நாட்டினர், ஐக்கிய அரபு எமிரேட் கோல்டன் விசாக்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் திருத்தப்பட்ட வெளியிடப்பட்ட COVID-19 நெறிமுறைகளுக்கு இணங்க இராஜதந்திர பணிகளின் உறுப்பினர்கள் இந்த பயணக் கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு பெற்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

More articles

Latest article