கொரோனா : தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக அமர்நாத் யாத்திரை ரத்து

Must read

ம்மு

ந்த ஆண்டும் அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது.

இமயமலையில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் அமர்நாத் குகைக் கோவில் அமைந்துள்ளது.  இங்குத் தானாகவே உருவாகும் பனி லிங்கத்தைத் தரிசிக்க ஆண்டு தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் செல்வது வழக்கமாகும்.   இந்த யாத்திரை ஜம்மு நகர் வழியாக நடக்கும்.

சென்ற ஆண்டு கொரோனா பரவல் இந்த காலகட்டத்தில் உச்சத்தில் இருந்தது.  இதையொட்டி ஜம்மு காஷ்மீர் அரசு அமர்நாத் யாத்திரையை ரத்து செய்தது.    இது பக்தர்களுக்கு மிகவும் ஏமாற்றத்தை அளித்தது.

இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு இன்னும் எதிர்பார்த்த அளவு குறையாததால் இந்த ஆண்டும் அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.  தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக அமர்நாத் யாத்திரை கொரோனாவால் ரத்து செய்யப்படுகிறது.

 

More articles

Latest article