சென்னை

ருக்குள் சுற்றித் திரியும் யானையான சின்னத்தம்பியை காயம் ஏற்படுத்தாமல் பிடிக்க வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வனப்பகுதிகளை அழித்து மனிதர்கள் பெரிய பெரிய கட்டிடங்களை கட்டி வருகின்றனர். இதனால் பாதிக்கப்படும் வன விலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுவதால் மக்கள் அஞ்சுகின்றனர். இது மனிதனின் அத்துமீறலில் விளைவு என பலரும் தெரிவித்த போதிலும் வனவிலங்குகளால் மனிதர்கள் துன்புறக் கூடாது என்பதையும் பலர் வலியுறுத்துகின்றனர்.

சின்னத் தம்பி என்னும் யானை கோவையை ஒட்டிய வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்தது. அதனால் வனத்துறையினர் அந்த யானையை பிடித்து டாப் ஸ்லிப்பில் கொண்டு விட்டனர். யானை சின்னத்தம்பி அங்கிருந்தும் கிளம்பி வெளியேறியது. அந்த யானை உடுமலைப்பேட்டை அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் அலைந்து திரிய த்டங்கியது. அமராவதி சர்க்கரை ஆலைக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் சின்னதம்பி யானை புகுந்து அட்டகாசம் செய்தது.

யானையை வனப்பகுதிக்கு விரட்டி அடிக்க வேண்டும் என மகக்ள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதே நேரத்தில் சின்னதம்பி யானை கிராம பகுதிகளில் உள்ள கரும்பு தோட்டங்களை பாழாக்கி நாசம் செய்தது. வயல் வெளிகளில் புகுந்தது. இதனால் விவசாயிகள் அச்சமடையவே சின்னதம்பியை விரட்ட கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டன. ஆனால் அந்த கும்கி யானையில் ஒன்றை நட்பாக்கிக் கொண்ட சின்னதம்பி அங்கிருந்தும் வெளியேறி நிலம்பூர் கிராமப் பகுதியில் உள்ள கரும்புக் காட்டில் புகுந்து அட்டகாசம் செய்தது.

வனத்துறை இது குறித்து உயர்நீதிமன்றத்துக்கு அளித்த மனுவில்,”சின்னதம்பி பொதுவான காட்டு யானைகளின் குணத்திலிருந்து மாறுபட்டுள்ளது. காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்தால் விரட்டி அடித்தால் மீண்டும் காட்டுக்குள் சென்று விடும். ஆனால் சின்னதம்பி காட்டை போலவே ஊரிலும் சகஜமாக வலம் வருகிறது.

நிலத்தில் புகுந்து பயிர்களை பாழாக்குவது வீட்டு தண்ணீர் தொட்டியில் நீர் பருகுவது என காட்டு யானைகலின் குணங்களுக்கு மாறாக நடந்துக் கொள்கிறது எனவே சின்னதம்பி யானையை பிடித்து யானைகள் முகாமில் அடைத்து வைக்க வேண்டும். பிற யானைகளுக்கு அளிக்கப்படும் பயிற்சிகளை சின்னதம்பிக்கும் அளிக்கவேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று உயர்நீதிமன்ற அமர்வு “சின்னதம்பி யானையை காயம் ஏற்படாமல் வனத்துறையினர் பிடிக்க வேண்டும். மக்களின் பாதுகாப்புக்காக இந்த யானையை பிடிக்க நீதிமன்றம் உத்தரவு இடுகிறது. அத்துடன் சின்னதம்பியை பிடித்து லாரியில் ஏற்றும் போது அந்த யானையை துன்புறுத்தக்கூடாது. யானையை முகாமில் வைப்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும்” என தெரிவித்துள்ளது.