தூத்துக்குடி

தென் மாவட்டங்களில் பெய்து வரும் கன மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

வானிலை ஆய்வு மையம் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. நேற்று முன் தினம் இரவு முதல் 4 மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது.

இங்குக் கடந்த 2 நாட்களாக அதி கன மழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும் நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்து பல பகுதிகளில் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

நெல்லை-தூத்துக்குடி இடையேயான ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது., தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

முக்கியமாக நெல்லை – சென்னை இடையே இருமார்க்கங்களிலும் வந்தே பாரத் ரயில் திருச்செந்தூர் – பாலக்காடு, நெல்லை – ஜாம் நகர் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் நிஜாமுதீன் – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில், முத்துநகர் விரைவு ரயில், கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

கன மழை காரணமாகத் தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.  தூத்துக்குடி மாநகர் பகுதி மற்றும் திருச்செந்தூர் பகுதி, கிராமப்புறங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நெல்லை, கன்னியாகுமரியிலும் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 509 மிமீ, ஸ்ரீவைகுண்டத்தில் 525 மிமீ, திருச்செந்தூரில்ல் 507 மிமீ மழை பெய்துள்ளது.