சென்னை: மின்சாரம், பால், குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்கவும், மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் இன்று நடைபெற்ற  வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆய்வுகூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் காணொலி காட்சி வாயிலாக அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் மாவட்டங்களில் நடைபெற்றும் வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.  அப்பொது,  பேசிய அமைச்ச்ர நேரு, கடந்த ஆண்டு மழைநீர் தேங்கிய இடங்களில் வடிகால் பணிகள் நடைபெற்றதால் இம்முறை மழைநீர் அதிகம் தேங்கவில்லை; நேற்று இரவிலிருந்து மாநகராட்சி சார்பில் 19,500 பேர் பணியில் உள்ளனர்” – ”மழை நீர் வடிகால் இல்லாத இடங்களில் மழைநீர் தேக்கம் இருக்கிறது; மழைநீரை அகற்ற 420 இடங்களில் மின்மோட்டார்கள் அமைக்கப்பட்டுள்ளன” என்றார்.

அதைத்தொடர்ந்து ஆட்சியர்களிடையே முதல்வரை உரையாற்றினார். அப்போது, வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து அதிகாரிகளும் தயாராக இருக்க வேண்டும் என்றவர், இந்த ஆண்டு  மிக கனமழை பெய்ய வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்களை மீட்டு முன்கூட்டியே நிவாரண முகாம்களில் தங்கவைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பை முன்னதாகவே தருவதை உறுதி செய்ய வேண்டும்.

சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு நேரடி சேவை வழங்கும் துறைகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.தொலைபேசி, வாட்ஸ்ஆப் வாயிலாக வரக்கூடிய புகார்களை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

பழுதடைந்த, பலவீனமான சுற்றுச்சுவர்களை கண்டறிந்து அப்புறுப்படுத்த வேண்டும். வெள்ளம் ஏற்படாதவாறு பாதுகாக்க வேண்டியது மாவட்ட ஆட்சியர்களின் பொறுப்பு. மழைக்காலம் சவாலான காலம், அதை மக்களுடன் இணைந்து எதிர்கொள்ள வேண்டும்.

மழைநீர் தேங்காதவாறு கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டியது அனைத்து மாவட்ட நிர்வாகத்தின் கடமையும், பொறுப்பும் ஆகும்; தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை முன்கூட்டியே மீட்க வேண்டும்”

மின்சாரம், பால், குடிநீர் உள்ளிட்டவை தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; மக்களுக்கு நேரடி சேவை வழங்கும் துறைகளில் கவனம் செலுத்த வேண்டும்”  என்று அறிவுறுத்தியதுடன், தொலைபேசியிலோ,வாட்ஸ்அப்பிலோ வரக்கூடிய புகார்களை உடனே நிவர்த்தி செய்ய வேண்டும்; அதிகாரிகளிடம் தெரிவித்தோம், உடனடியாக நிவர்த்தி செய்தார்கள் என மக்கள் கூறுவதே மிகப் பெரிய பாராட்டு” என கூறினார்.

மேலும் பருவமழை முன்னெச்சரிக்கை பணியில், உள்ளாட்சி அமைப்புகள், வருவாய்துறை, பொதுப்பணித்துறை, வேளாந்துறை, தீயணைப்பு துறைகள் என அனைவரும் தனித்தனியே செயல்படாமல் ஒருங்கிணைந்து செயல்படுங்கள்  என்றும் அறிவுறுத்தினார்.

சபாஷ் மாநகராட்சி: கொட்டும் மழையிலும் மழைநீர் அகற்றும் பணியில் இரவோடு இரவாக களமிறங்கிய மேயர் பிரியா…