சென்னை
சென்னையில் கடந்த ஒரு மணி நேரமாக மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

கிண்டி ரயில் நிலையம் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் அருகே தண்டவாளம் வளைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது எனவே மின்சார ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இந்த வளைந்த தண்டவாளத்தைச் சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் இந்த பணி முடிந்து ரயில் போக்குவரத்து சீர் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel