சென்னை:
திருத்தணி முதல் சென்னை கடற்கரை, சூலூர்பேட்டை முதல் சென்னை கடற்கரை வரை  இயக்கப்பட்டு வந்த  புறநகர் மின்சார ரயில்கள் இனி நேரடியாக வேளச்சேரி வரை நீட்டிக்கப்பட்டுள்தாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
train
புறநகர் பகுதிகளில் இருந்து வருபவர்கள், வேளச்சேரி போக வேண்டுமானால் சென்ட்ரல் வந்து பின்னர் அங்கிருந்து கடற்கரை ரெயில்வே ஸ்டேசன் சென்று வேளச்சேரி ரெயிலை பிடிக்க வேண்டும். அல்லது புறநகரிலிருந்து சென்னை கடற்கரை வரை வரும் ரெயிலை காத்திருந்து பிடிக்க வேண்டிய நிலை இருந்தது. இது பொதுமக்களுக்கு சிரமமாக இருந்தது. இதுகுறித்து பயணிகள் நல சங்கமும் ரெயில்வேக்கு பலமுறை மனு கொடுத்துள்ளது.
இந்த நிலையில், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி திருத்தணி, சூலூர்பேட்டை யில் இருந்து வரும் புறநகர் ரயில்கள் இனி வேளச்சேரி வரை நீட்டிக்கப்படும் என ரெயில்வே அறிவித்துள்ளது.
இதனால் திருத்தணி – சென்னை கடற்கரை, சூளூர்பேட்டை – சென்னை கடற்கரை மார்க்கமாக வரும் புறநகர் மின்சார ரயில் பயணிகள், அதே ரயிலில் வேளச்சேரி வரை செல்லலாம்.   வரும் 25ந்தேதி முதல் மூன்று வாரத்துக்கு சோதனை முயற்சியாக நடைபெறும் என்றும் அறிவித்து உள்ளது.
ஆவடிவேளச்சேரி

 • ஆவடியில் இருந்து அதிகாலை  4.10, 4.25, காலை 6.10, 7.10., 8.15, 8.45, பிற்பகல் 12.10, 2.40, மாலை 4.20, 4.40, 5.55 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு வரும் மின்சார ரெயில்கள், தொடர்ந்து அங்கிருந்து வேளச்சேரிக்கு இயக்கப்படும்.
 • அரக்கோணத்தில் இருந்து அதிகாலை 4.00, காலை 7.55, மாலை 4.20 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு வரும் மின்சார ரெயில்கள்
 • பட்டாபிராம் இ–டெப்போவில் இருந்து காலை 4.40, இரவு 8.35 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு வரும் மின்சார ரெயில்கள்

திருவள்ளூர்வேளச்சேரி

 • கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை  8.55, மாலை 4.30, இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு வரும் மின்சார ரெயில்கள்
 • திருவள்ளூரில் இருந்து காலை 11. 05, பிற்பகல் 1.40, மாலை 5.55, 6.25, 7.45 மணிக்கு புறப்பட்டு கடற்கரைக்கு வரும் மின்சார ரெயில்கள்
 • திருத்தணியில் இருந்து காலை 8.55 மணிக்கு புறப்பட்டு கடற்கரைக்கு வரும் மின்சார ரெயில்

சூலூர்பேட்டையில் இருந்து

 • கடம்பத்தூரில் இருந்து பிற்பகல் 12.05 மணிக்கு புறப்பட்டு கடற்கரைக்கு வரும் மின்சார ரெயில்
 • சூலூர்பேட்டையில் இருந்து மாலை 5.20 மணிக்கு புறப்பட்டு கடற்கரைக்கு வரும் மின்சார ரெயில் ஆகியவை அனைத்தும் வேளச்சேரி வரை தொடர்ந்து இயக்கப்படும்.

வேளச்சேரிஆவடி

 • வேளச்சேரியில் இருந்து காலை  6.25,  7.25, 10.15, இரவு 8.30, 10.30 மணிக்கு புறப்பட்டு கடற்கரைக்கு வரும் மின்சார ரெயில்கள், ஆவடி வரையும்
 • வேளச்சேரியில் இருந்து அதிகாலை  5.00 மணிக்கு புறப்பட்டு கடற்கரைக்கு வரும் மின்சார ரெயில், பொன்னேரி வரையும்
 • வேளச்சேரியில் இருந்து அதிகாலை  5.30, காலை 9.05, பிற்பகல் 12.15, 2.30, மாலை 4.55, 6.20, இரவு 7.00 மணிக்கு புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயில்கள், திருவள்ளூர் வரையும்

வேளச்சேரிஅரக்கோணம்

 • வேளச்சேரியில் இருந்து காலை  8.20, 9.15, பிற்பகல் 12.55, மாலை 4.40 மணிக்கு புறப்பட்டு கடற்கரை செல்லும் மின்சார ரெயில்கள், பட்டாபிராம் இ–டெப்போ வரையும்
 • வேளச்சேரியில் இருந்து காலை 8.50, பிற்பகல் 2.55, மாலை 5.45, இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு கடற்கரை செல்லும் மின்சார ரெயில்கள் கும்மிடிப்பூண்டி வரையும்
 • வேளச்சேரியில் இருந்து பிற்பகல்  1.35 மணிக்கு புறப்பட்டு கடற்கரை செல்லும் மின்சார ரெயில் அரக்கோணம் வரையும் தொடர்ந்து இயக்கப்படும்.

நேரத்தில் மாற்றம் இல்லை

 • வேளச்சேரியில் இருந்து பிற்பகல் 1.55 மணிக்கு புறப்பட்டு கடற்கரை செல்லும் மின்சார ரெயில் சூலூர்பேட்டை வரையிலும், வேளச்சேரியில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு கடற்கரை செல்லும் மின்சார ரெயில் திருத்தணி வரையிலும் தொடர்ந்து இயக்கப்படும்.

மேற்கூறப்பட்ட மின்சார ரெயில் சேவைகள் அனைத்தும் பொதுமக்களின் வசதிக்காக ஒருங்கிணைக்கப்பட்டு  இயக்கப்படுகின்றன. அதேபோல், அந்த மார்க்கத்தில் செல்லும் ரெயில்களின் நேரத்தில் மாற்றம் எதுவும் செய்யப்பட வில்லை.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.