டெல்லி: இப்போதுதான் உங்களுக்கு உண்மை புரிந்ததா? தேர்தல் தோல்வி, 600க்கும் மேற்பட்ட விவசாயிகளின் தியாகம், விவசாயச் சட்டங்களை ரத்து செய்ய பிரதமர் மோடியை தூண்டியது என  பிரியங்கா காந்தி வேளாண் சட்டம் வாபஸ் குறித்து கருத்து தெரிவித்து உள்ளார்.

பிரதமர் மோடி இன்று காலை நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது, மத்தியஅரசு அமுல்படுத்திய 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.  மேலும், நாட்டில்  விவசாயிகள் 80% பேர் சிறு விவசாயிகளாக உள்ளனர். விவசாயிகளின் நலனுக்காகவே வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. கடந்த 2014ம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு சேவை செய்வதையே நோக்கமாக கொண்டுள்ளோம். ஆனால் விவசாய சட்டங்கள் குறித்து எங்களால் விவசாயிகளுக்கு புரியவைக்க முடியவில்லை. இதற்கு நான் மன்னிப்பு கோருகிறேன்.  இதனால் மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெறுகிறது என்று தெரிவித்தார்.

பிரதமரின் அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்தும், விமர்சித்தும் வரும் நிலையில்,   காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, வேளாண் சட்டம் வாபஸ் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளார்.

விவசாயிகளின் சத்தியாகிரக போராட்டத்துக்கு தலைகுனிந்தார் பிரதமர் மோடி! விவசாயிகளுக்கு வாழ்த்துகள்! ராகுல்காந்தி

இதுகுறித்து அவர் சில தகவல்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

“பிரதமரின் ‘மாறும் அணுகுமுறையை’ நம்புவது கடினம்.

தேர்தல் தோல்விக்கு பயந்து இப்போது திடீரென்று நாட்டின் உண்மையைப் புரிந்து கொள்ளத் தொடங்குகிறீர்கள்” 

“நீங்கள் விவசாயிகளை கைது செய்தீர்கள், உங்கள் காவல்துறை அவர்கள் மீது தடியடி நடத்தியது, இப்போதுதான் உங்களுக்கு உண்மை புரிந்ததா? 

இந்த தேசத்தின் உண்மையை நீங்கள் புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறீர்கள் – சரி.

இந்த நாடு விவசாயிகளால் ஆனது, இந்த தேசம் விவசாயிகளுக்கு சொந்தமானது; விவசாயிதான் அதன் உண்மையான பராமரிப்பாளர், அவர்களின் நலன் மற்றும் நலனை மிதித்து எந்த அரசாங்கமும் வாழ முடியாது,” 

“350 நாட்களுக்கும் மேலான போராட்டத்தில் உயிரிழந்த 600 விவசாயிகளை ‘தியாகிகள்'”

“விவசாயிகள் மீது கார் மோதி நசுக்கிக் கொன்றவர் உங்கள் அமைச்சர் ஒருவரின் மகன்”

“உங்கள் கட்சித் தலைவர்கள் விவசாயிகளை அவமதித்து, அவர்களை பயங்கரவாதிகள், துரோகிகள், குண்டர்கள், குண்டர்கள் என்று அழைத்தார்கள், நீங்களே அவர்களை போராட்டக்காரர்கள் என்று அழைத்தீர்கள்.

உங்கள் நிலைப்பாட்டில் இந்த மாற்றத்தை நம்புவது கடினமாக உள்ளது,” 

“ஜெய் ஜவான், ஜெய் கிசான், ஜெய் பாரத்”

இவ்வாறு பல பதிவுகளை பிரியங்கா காந்தி பதிவிட்டுள்ளார்.