சென்னை: தேர்தல்கள் முடிந்தன. இதோ பசுத்தோல் உதிர்ந்துவிட்டது என நாடு முழுவதும் எரிபொருட்களின் விலை உயர்வு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் நடிகர் கமல்ஹாசன் டிவிட் பதிவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல், கேஸ் போன்ற எரிபொருட்கள் விலை உயர்த்தப்படாமல் இருந்து வந்தது. உக்ரைன் ரஷ்யா போரினால், கச்சா எண்ணை அதிகரித்த நிலையிலும், எரிபொருட்களின் விலை உயர்த்தப்படவில்லை. இதற்கு காரணமாக, 5 மாநில சட்டமன்ற தேர்தலே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.
தற்போது சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து, 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றி உள்ள நிலையில், மீண்டும் எரிபொருட்கள் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ள டிவிட்டில், தேர்தல்கள் முடிந்தன. இதோ பசுத்தோல் உதிர்ந்து விட்டது. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு தொடங்கிவிட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்வு என்பார்கள். ஆனால் அது கீழே இறங்கியபோதும் விலையைக் குறைக்கவில்லை இவர்கள். அதில் சேர்த்த லட்சம் கோடிகளை வைத்து இப்போது சரிக்கட்டலாமே… என தெரிவித்துள்ளார்.